Join THAMIZHKADAL WhatsApp Groups
ஆரஞ்சு பழத்தின் ஆரோக்கிய நன்மைகளைப் போல், ஆரஞ்சு விதைகளிலும் நிறையவே ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. ஆரஞ்சு பழத்தை சாப்பிடும் போது அதன் விதைகளையும் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்துக்கு பல்வேறுவிதமான நன்மைகள் கிடைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
சிறந்த ஆன்டி ஆக்ஸிடன்டாக தொழிற்படுகிது:
ஆரஞ்சு பழத்தை போலவே அதன் விதைகளும் சிறந்த மற்றும் மிகவும் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்டாக தொழிற்படுகின்றன. இவற்றை உட்கொள்வதால் உடல் புத்துணர்ச்சி பெறுகிறது. அத்துடன் உடல் ஆரோக்கியத்தை பேணவும் இவை உதவுகின்றன.
ஆரஞ்சு பழத்தை உண்ணும் போதும், ஆரஞ்சு பழச்சாறு தயாரிக்கும் போதும், அதன் விதைகளை அப்புறப்படுத்தாமல் ஆரஞ்சு விதைகளையும் சேர்த்துகொள்ளுங்கள். இதனால் ஆரஞ்சு பழத்தில் இருந்து கிடைக்கும் முழு ஆரோக்கிய நன்மையையும் உங்களால் பெற்றுக்கொள்ள முடியும்.
உடலை புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும்:
உடல் சோம்பலுக்கு ஆரஞ்சு விதைகளை உட்கொள்வதால் சிறந்த பலனை பெற முடியும். ஆரஞ்சு விதைகளில் மிகவும் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் காணப்படுவதால் உடலிலுள்ள நச்சுக்களை நீக்கி, உடலை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.
கூந்தல் பராமரிப்பு :
ஆரஞ்சு விதைகளால் தயாரிக்கப்படும் எண்ணெய் உங்கள் கூந்தலுக்கு ஒரு சிறந்த கண்டிஷனராக தொழிற்படுகிறது. இதனால் உங்கள் கூந்தல் வலிமை பெறுவதுடன், கூந்தல் வளர்ச்சிக்கும், நீண்ட கூந்தலை பெறவும் இது உதவுகிறது. இது தலைபகுதியின் இரத்த ஓட்டத்தை சீராக பேணவும் முடியும்.
No comments:
Post a Comment