Join THAMIZHKADAL WhatsApp Groups
கல்லீரல் தொடர்பான பிரச்னைகளுக்கு இந்த சூரணத்தை தொடர்ந்து பயன்படுத்தி பலன் பெறலாம்.
தேவையான பொருள்கள்
அதிமதுரம் - 100
கீழாநெல்லி (உலர வைத்தது) - 200 கிராம்
சீரகம் - 100 கிராம்
செய்முறை
முதலில் கீழாநெல்லி இலைகளை தேவையான அளவு பறித்து நன்கு உலர வைக்க வேண்டும்.
அதிமதுரத்தை எடுத்து நன்கு உலர்ந்த கீழாநெல்லி இலையுடன் சேர்த்து அதனுடன் மேற்கூறிய அளவு சீரகத்தையும் ஒன்றாக கலந்து நன்கு அரைத்து பொடி செய்து கொள்ளவும்.
அதிமதுரம் மற்றும் கீழாநெல்லி பொடியாக கிடைத்தால் தலா 100 கிராம் வாங்கிக் கொள்ளலாம்.
பயன்கள்
இந்த சூரணம் கல்லீரல் சார்ந்த அனைத்து குறைபாடுகளையும் குணப்படுத்த உதவும் அருமருந்தாகும்
மேற்கூறிய குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் மேற்கூறிய சூரணத்தை தயார் செய்து தினமும் காலை வேளையில் மட்டும் சாப்பாட்டிற்கு முன்பு தலா இரண்டு கிராம் அளவு எடுத்து சுடுநீரில் கலந்து குடித்து வரவும்.
நீங்கள் எடுத்துக் கொண்டியிருக்கிற மருந்துகளோடு இதனை எடுத்துக் கொள்ளலாம்.
இரவு படுக்கப் போகும் முன்
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு
அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.
பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.- கோவை பாலா,
No comments:
Post a Comment