Join THAMIZHKADAL WhatsApp Groups
எஸ்.ஐ தேர்வு இறுதிப்பட்டியலை வெளியிட ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. தேர்வு பட்டியலை முடிவு செய்யவோ அல்லது பணி நியமனம் செய்யவோ கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் எஸ்.ஐ தேர்வு கடந்த ஜனவரி 12,13ல் நடைபெற்றது.
கடலூர், வேலூர் உள்ளிட்ட குறிப்பிட்ட மையங்களில் படித்து தேர்வு எழுதியோர் அதிக அளவில் தேர்ச்சி பெற்றனர்.
புதிதாக எஸ்.ஐ பணிக்கு தேர்வு நடத்த உத்தரவிட கோரி பலர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த ஐகோர்ட், 3 பேர் குழு அமைத்து முறைகேடு தொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டிருந்தது. தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் வாடிப்பட்டியை சேர்ந்த அசோக்குமார் முறையீடு செய்துள்ளார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.ஐ தேர்வு நியமனம் தொடர்பான தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. 3 பேர் குழுவின் விசாரணை முடியும் வரை தேர்வானவர்கள் பட்டியலை இறுதி செய்ய நீதிபதிகள் தடை விதித்தனர்.
No comments:
Post a Comment