Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, November 12, 2020

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஒரு பெண் குழந்தை கல்வி உதவித் திட்டம்: சிபிஎஸ்இ அறிவிப்பு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
சிபிஎஸ்இ பள்ளி மற்றும் அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு முடித்த ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை திட்டத்தை சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

சிபிஎஸ்இ அளிக்கும் இந்த கல்வி உதவித் தொகை திட்டத்தில் சேர்ந்து பயன்பெற தகுதியுள்ள மாணவிகள், www.cbse.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு டிசம்பர் 10 கடைசி நாளாகும்.

2020-ஆம் ஆண்டில் சிபிஎஸ்இ பள்ளியில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற, பெற்றோருக்கு ஒரே ஒரு மகளாக இருக்கும் மாணவிகள், இரண்டு கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். அதாவது, பிளஸ் 2 படிப்புக்கான கல்வி உதவித் தொகை மற்றும் 2019-ஆம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கான பரிசுக்கும் விண்ணப்பிக்கலாம்.

இந்த உதவித் தொகைக்கு, ஒற்றைப் பெண் குழந்தையாக இருந்து, பத்தாம் வகுப்பில் 60 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் தகுதிபெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News