Join THAMIZHKADAL WhatsApp Groups
வீடு கட்டுவோர் மற்றும் வீடு வாங்குவாருக்கு 20 சதவீதம் வரை வருமான வரி நிவாரணம் அறிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மாலா சீதாராமன்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கூறும் போது, "ரியல் எஸ்டேட் துறையில் நிறைய வீடுகள் தேங்கி உள்ளன. அவற்றின் விற்பனயை அதிகரிக்க, ரூ .2 கோடி வரை மதிப்புள்ள குடியிருப்பு பிரிவுகளுக்கு சர்கிள் ரேட் மற்றும் பத்திர விலைக்கு மத்தியில் இருக்கும் விலை வரம்பை 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதம் வரையில் அதிகரிக்க உள்ளோம். இதனால் வீடு வாங்குவோருக்கு அதிக வருமான வரி சலுகை கிடைக்கும். முன்னுரிமை அடிப்படையில் விற்பனையை ஊக்குவிக்க விலை வரம்பை, 2021 ஜூன் 30 வரை 10% முதல் 20% வரை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்.
தற்போதைய நிலையில் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 43 சிஏ, தற்போது சர்கிள் ரேட் மற்றும் பத்திர விலைக்கு இடையில் 10% விலை வரம்பை அனுமதிக்கிறது. இப்போது 20 சதவீதம் ஆக்கப்படுவதால் நிறைய வீடுகள் விற்கும் என எதிர்பார்க்கிறோம் மக்கள் குறைவான வரி செலுத்தினால் போதும். இந்த சலுகை வீடு வாங்க விரும்பும் நடுத்தர வர்க்கத்திற்கு உதவும். இதற்காக வருமான வரிச் சட்டத்தில் தேவையான திருத்தம் உரிய நேரத்தில் செய்யப்படும்.
பிரத மந்திரி ஆவாஸ் யோஜானா திட்டத்திற்கு 18,000 கோடி ரூபாய் கூடுதலாக ஓதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகை மூலம் 12 லட்சம் வீடுகள் கட்ட ஆரம்பிக்கவும், 18 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கவும் முடியும். ஏற்கனவே 8000 கோடி இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment