Join THAMIZHKADAL Telegram Group
Join THAMIZHKADAL WhatsApp Groups
மேஷ ராசி :
கலைத்துறையில் இருப்பவர்களுக்கு வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் மற்றும் புதிய தொழில்நுட்ப கருவிகள் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தடைபட்டு போன சில ஒப்பந்தங்கள் மீண்டும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
ரிஷப ராசி :
எழுத்துத்துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். கலை ரசனையை எடுத்துரைக்கும்போது அதில் புதிய முயற்சியால் மாற்றத்தை உருவாக்கி பலரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள்.
மிதுன ராசி :
புதிய தொழில்நுட்பத்தை பற்றிய ஆலோசனைகளும், லாபங்களும் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பாராத சில முயற்சிகளின் மூலம் நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகள் அகலும். விலகி சென்ற நெருக்கமானவர்கள் மீண்டும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம்.
கடக ராசி :
கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நெருக்கமான நபர்களின் மூலம் மாற்றங்களும், புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். இசை சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். தற்காப்பு கலைகளின் மூலம் பிரபலம் அடைவதற்கான சூழ்நிலைகள் சாதகமாக அமையும்.
சிம்ம ராசி :
கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புதுவிதமான சிந்தனைகளும், அதை சார்ந்த முயற்சிகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் உண்டாகும். திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பெரியோர்களின் ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும் மனமகிழ்ச்சியை உண்டாக்கும்.
கன்னி ராசி :
கலைத்துறையில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கும். புத்துணர்ச்சியும், புதிய வாய்ப்புகளும் கிடைக்கப் பெறுவீர்கள். வயதில் மூத்த மற்றும் பிரபலமானவர்களின் அறிமுகங்கள் மற்றும் நட்புகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும்.
துலாம் ராசி :
கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான சில இன்னல்கள் படிப்படியாக குறையும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
விருச்சிக ராசி :
கலை தொடர்பான பணியில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். புதிய தொழில்நுட்பங்களின் மூலம் திறமைகளை பிரபலப்படுத்துவதற்கான உதவிகள் கிடைக்கும். நுட்பமான சிந்தனைகளின் மூலம் அனைவராலும் பாராட்டுகளை பெறுவதற்கான சூழல் உண்டாகும்.
தனுசு ராசி :
கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி தெளிவு கிடைக்கும். அறிமுகமில்லாத பிறமொழி மற்றும் பிறநாட்டு மக்களின் மூலம் ஆதரவுகளும், பாராட்டுகளும் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.
மகர ராசி :
கலை சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சாதகமாக அமையும். வயதில் மூத்த கலைஞர்களின் அறிவுரைகளை கேட்டு நடப்பதன் மூலம் நன்மதிப்பை உருவாக்கி கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும்.
கும்ப ராசி :
கலை சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். எழுத்துத்துறையில் இருப்பவர்களுக்கு பொருளாதார உயர்வுக்கான வாய்ப்புகள் உருவாகும். நண்பர்களின் மூலம் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள்.
மீன ராசி :
தங்களது திறமையின் மூலம் ஊரறிய புகழ் பெறுவீர்கள். சமுதாயத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். செய்யும் புதிய முயற்சிகளுக்கு ஏற்ப எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும்.
IMPORTANT LINKS
Thursday, November 12, 2020
பன்னிரண்டு ராசிகளுக்குமான குருப்பெயர்ச்சிப் பலன்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment