Join THAMIZHKADAL WhatsApp Groups
பிளேலிஸ்ட்கள் என்பது YouTube வீடியோக்களின் ஒரு குழு ஆகும். ஒரு பயனர் பிளேலிஸ்ட்டைப் பார்க்கும்போது, அந்த பிளேலிஸ்ட்டில் உள்ள பிற வீடியோக்கள் தானாகவே இயங்கும். வீடியோ SEO-க்கு பிளேலிஸ்ட்கள் முக்கியமானது.
வீடியோக்கள் என்றாலே பலருக்கும் நினைவிற்கு வருவது YouTube தான். திரைப்பட டிரெய்லர்கள், வீடியோ பாடல்கள், காமெடி நிகழ்ச்சிகள், அறிவுசார்ந்த விஷயங்கள், சமையல் என பலவற்றை நாம் YouTube-இல் காண்கிறோம். சிலருக்கு ஒரு வீடியோ பிடித்திருக்கும், அதை டவுன்லோடு செய்ய நினைப்பார்கள், ஆனால் எப்படி டவுன்லோடு செய்ய வேண்டும் என்று தெரியாது.
சிலருக்கு ஒரு வீடியோவை மட்டும் டவுன்லோடு செய்ய தெரிந்திருக்கும். ஆனால், Playlistல் உள்ள எல்லா வீடியோக்களையும் ஒரே முறையில் டவுன்லோடு செய்யத் தெரிந்திருக்காது. அவ்வாறு YouTube வீடியோக்களை மொத்தமாக டவுன்லோடு செய்ய பல்வேறு ஆப்ஷன்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை உங்களுக்காக இங்கு கொண்டுவந்துள்ளோம்.
3 முக்கிய காரணங்களுக்காக பிளேலிஸ்ட்கள்: முதலில், பிளேலிஸ்ட்கள் உங்கள் உள்ளடக்கத்தை வெவ்வேறு வகைகளாக மாற்றுவதை எளிதாக்குகின்றன. அந்த வகையில், உங்கள் சேனல் பக்கத்தை யாராவது புதிதாகப் பார்க்கும்போதெல்லாம், அவர்களுக்கான சரியான உள்ளடக்கத்தை அவர்கள் எளிதாகக் காணலாம். இரண்டாவதாக, பிளேலிஸ்ட்கள் கண்காணிப்பு நேரத்தை அதிகரிக்கும். ஏனென்றால், பிளேலிஸ்ட்கள் அந்த பிளேலிஸ்ட்டில் உள்ள எல்லா வீடியோக்களையும் தானாகவே இயக்கும். மூன்றாவதாக, வீடியோ SEOக்கு பிளேலிஸ்ட்கள் முக்கியமானது.
ஆண்ட்ராய்டு போனில் YouTube வீடியோக்களை டவுன்லோடு செய்ய :
முதலில் Videoder என்ற ஆப்ஸை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.
இப்போது Videoder ஆப்ஸை ஓபன் செய்து, அதிலேயே யூடியூப் ஆப்பையும் ஓபன் செய்யவும்.
YouTube திறந்ததும், நீங்கள் டவுன்லோடு செய்ய விரும்பும் Youtube Playlist அருகில் டவுன்லோடு ஆப்ஷன் இருக்கும். அதை க்ளிக் செய்து வீடியோவை டவுன்லோடு செய்யலாம்.
இதே போல் மொபைல் பிரவுசரில் மூலமாக YouTube லிங்க் காப்பி செய்து, அதை Videoderல் பேஸ்ட் செய்தும் டவுன்லோடு செய்யலாம்.
iPhone-இல் யூடியூப் பிளேலிஸ்ட்களை டவுன்லோடு செய்ய :
துரதிர்ஷ்டவசமாக, ஆண்ட்ராய்டு போன்ற ஆப்ஸ் iPhoneன் லோக்கல் ஸ்டோரேஜில் YouTube வீடியோக்களை மொத்தமாக டவுன்லோடு செய்ய அனுமதிக்கிறது. நீங்கள் ஒரு iPhone பயனராக இருந்தால், யூடியூப் பிளேலிஸ்ட்களை மொத்தமாக டவுன்லோடு செய்ய விரும்பினால், இந்த வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
படி 1: உங்கள் iPhoneல், யூடியூப் ஆப்ஸிற்குச் சென்று உங்களுக்கு விருப்பமான சேனலை பார்வையிடவும்.
படி 2: சேனலின் Playlists tabக்குச் சென்று> ஏதாவது ஒரு பிளேலிஸ்ட்டை தட்டவும்> எல்லா வீடியோக்களையும் ஒரே நேரத்தில் சேமிக்க Download பட்டனை அழுத்தவும். இந்த முறை Android சாதனங்களிலும் இயங்குகிறது.
உங்கள் போன் அல்லது கம்ப்யூட்டர்களில் ஆஃப்லைனில் பார்ப்பதற்கு YouTube பிளேலிஸ்ட்களை டவுன்லோட் செய்ய அனுமதிக்கும் சில எளிய வழிகள் இவை.
சாப்ட்வேர் இல்லாமல், ஆன்லைனிலேயே வீடியோக்களை டவுன்லோடு செய்ய:
படி 1. முதலில் YouTube Playlist.cc என்ற இணையதளத்தை ஓபன் செய்து, ஒரு கணக்கை உருவாக்கிக் கொள்ளவும்.
படி 2. இப்போது நீங்கள் டவுன்லோடு செய்ய விரும்பும் YouTube Playlistன் லிங்கை காப்பி செய்து கொள்ளவும். அதாவது: click Playlists > right-click any playlist and click Copy Link.
படி 3. அந்த லிங்கை அப்படியே YouTubePlaylist.cc இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் search barல் பேஸ்ட் செய்ய வேண்டும். பின்பு, All Title Video என்பதை க்ளிக் செய்து YouTube வீடியோக்களை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
கம்ப்யூட்டர்/லேப்டாப்பில் யூடியூப் வீடியோக்களை மொத்தமாக டவுன்லோடு செய்ய :
படி 1. முதலில் 4K Video Downloader ஐ டவுன்லோடு செய்து ஓபன் செய்து கொள்ளவும்.
படி 2. இப்போது நீங்கள் டவுன்லோடு செய்ய விரும்பும் YouTube Playlistன் லிங்கை காப்பி செய்து கொள்ளவும். அதாவது: click Playlists > right-click any playlist and click Copy Link.
படி 3. அந்த லிங்கை அப்படியே 4K Video Downloader இல் பேஸ்ட் செய்து, டவுன்லோடு Playlist என்பதைக் க்ளிக் செய்யவும்.
இதைமட்டும் பின்பற்றினால் போதும் YouTube வீடியோக்களை எளிமையாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
இயல்பாக, நீங்கள் ஒரு புதிய வீடியோவை பிளேலிஸ்ட்டில் சேர்க்கும்போது, யூடியூப் அதை பட்டியலின் கீழே சேர்க்கிறது. ஆனால் உங்கள் வீடியோக்களை தந்திரமாக நீங்கள் ஒழுங்கமைப்பதன் மூலம் உங்கள் பிளேலிஸ்ட்களிலிருந்து அதிகமானவற்றைப் பெறலாம்.
You can now download the premium version from here.
ReplyDelete