வைட்டமின்-சி அடங்கியுள்ள பிளம்ஸ், மிகச் சிறந்த நோய் எதிர்ப்புப் பொருளும் கூட. உடலை நோய்த் தொற்றுகளில் இருந்து காப்பதில், வைட்டமின் சி-ன் பங்கு மகத்தானது. தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை அகற்றும் தன்மையும் வைட்டமின் சி-க்கு உண்டு. வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் சத்துக்கள் பிளம்ஸ் பழத்தில் சிறப்பாகவே உள்ளன. வைட்டமின் ஏ, பார்வைத்திறனுக்கு மிக அவசியமானது.
சளிச்சவ்வை ஆரோக்கியமாக இயங்கச் செய்து சளித்தொல்லையை தவிர்க்கச் செய்யும். நுரையீரல் மற்றும் வாய்ப் புற்றுநோய்களில் இருந்து காக்கும் ஆற்றலும் வைட்டமின் ஏ-க்கு உள்ளது. ரத்தத்தை விருத்தி செய்வதோடு, ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது. மேலும், ரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புப் பொருட்களை கரைக்கும் குணமுடையது.
சிறுநீரகக் கோளாறுகளை நீக்குவதோடு, தசைகளின் இறுக்கத்தைக் குறைத்து மென்மையடையச் செய்யும். நரம்புகளுக்கு ஊக்கத்தைக் கொடுத்து மூளை நரம்புகளுக்கு அதிக பலம் கொடுக்கும். மன அழுத்தத்தைப் போக்கி டென்ஷனைக் குறைக்கக்கூடியது.
No comments:
Post a Comment