எலுமிச்சையின் தோலில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-செப்டிக் பண்புகள் வளமான அளவில் உள்ளது. இது இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளில் ஏற்படும் வலியைப் போக்கும் திறன் கொண்டவை. அதோடு மூட்டு மற்றும் இடுப்பு வலியைப் போக்குவதிலும் சிறந்தது.
10 எலுமிச்சைகளை எடுத்து நீரில் கழுவி, பின் அந்த எலுமிச்சைகளின் தோலை சீவி எடுத்துக் கொண்டு, ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு, அத்துடன் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து மூடி, 15 நாட்கள் ஊற வையுங்கள். பின் அந்த எண்ணெயை ஒரு துணியில் நனைத்து வலியுள்ள மூட்டு மற்றும் இடுப்பு பகுதிகளில் வைத்துக் கட்டி, இரவு முழுவது ஊற வைக்க வலி மாயமாய் மறையும்.
எலுமிச்சைகளின் தோலை சீவி எடுத்து, பாதிக்கப்பட்ட பகுதியில் வைத்து, துணி பயன்படுத்தி கட்டி, சில மணிநேரம் ஊற வைப்பதன் மூலமும் மூட்டு மற்றும் இடுப்பு வலி குறையும்.
எலுமிச்சையின் தோலை சீவி எடுத்த பின், எஞ்சிய எலுமிச்சையின் சாற்றினைப் பிழிந்து ஜூஸ் தயாரித்து குடித்தால் சில நன்மைகள் கிடைக்கும்.
IMPORTANT LINKS
Thursday, December 31, 2020
மூட்டு மற்றும் இடுப்பு வலியை போக்கும் எலுமிச்சை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment