வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இனி இ -பாஸ் கட்டாயம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய உருமாறிய கொரோனா பரவலை தடுக்க புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா தவிர்த்து வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ -பாஸ் கட்டாயம.
இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் ஜனவரி 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.திரைப்படம் மற்றும் சின்னத்திரை உள்பட திரைப்ட தொழிலுக்கான உள் அரங்கு மற்றும் திறந்தவெளியில் நடக்கும் படப்பிடிப்புகளுக்கு வெளியிடப்பட்ட உரிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு பணி செய்யும் நபர்களின் எண்ணிக்கை உச்ச வரம்பின்றி அனுமதிக்கப்படும்.
உள் அரங்கில் அதிகபட்சம் 50 சதவிகித இருக்கைகள் அல்லது அதிகபட்சமாக 200 நபர்கள் பங்கேற்கும் வண்ணம் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார, கல்வி மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதிக்கப்படும். இதுபோன்ற கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது சென்னை மாநகராட்சி அல்லது காவல் துறை ஆணையர் அவர்களிடமும் உரிய முன் அனுமதி பெறுவது அவசியம்.அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், வழக்கமான நேர நடைமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்யலாம்.
ஏற்கனவே, நடைமுறையில் உள்ள செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment