அரசுப் பள்ளிகளுக்கான தேவை: தகவல் திரட்டுகிறது மத்திய அரசு கோவை : பள்ளி மேம்பாட்டு திட்டம் என்ற பெயரில், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பள்ளிக்கான தேவை, நிதி ஒதுக்கீடு குறித்த தகவல்கள் திரட்டப்படுகின்றன.
தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்களின் விபரங்கள், பள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை முறைமை (எமிஸ்) மூலம் திரட்டப்பட்டு வருகின்றன.இது தவிர, மத்திய
அரசு, ஒவ்வொரு ஆண்டும், மாவட்ட கல்வி தகவல்கள் என்ற பெயரில், யூடைஸ் என்ற விண்ணப்பம் மூலம், பள்ளியில் உள்ள கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் பணியிடங்கள், மாணவர்களின் விபரங்களை திரட்டுகிறது.
இந்த விபரங்களின் அடிப்படையில் தான், தேவையை பொறுத்து, அரசுப்பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கப்படுகிறது. வரும், 2021 முதல், 2024 வரையிலான அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, பள்ளிகளுக்கான தேவை குறித்த தகவல்களை பூர்த்தி செய்ய, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதில், பள்ளி கட்டமைப்பு வசதிகள், கூடுதலாக தேவைப்படும் கட்டடங்கள், அதற்கு ஆகும் செலவினம், ஆசிரியர்களுக்கான பயிற்சி, கற்றலில் மாணவர்களின் கல்வித்தரம் குறித்த பல்வேறு தகவல்கள் தலைமையாசிரியர்களிடம் கேட்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment