அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் (ஏஐசிடிஇ) வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, அரசு கல்லூரி, பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணியில் அண்ணா பல்கலைக்கழகம் முனைப்பாக செயல்பட்டு வருகிறது.
இதற்கிடையில், ஆசிரியர் பணியிடம் வாங்கித் தருவதாகசில தரகர்கள், அங்கீகரிக்கப்படாத நபர்கள் தங்களை அணுகுவதாக, சில விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஆசிரியர் பணி தொடர்பாக வரும் நம்பகத்தன்மை இல்லாத, அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்படாத நபர்கள் சில விண்ணப்பதாரர்களை தொடர்பு கொண்டு, பணி வாங்கித் தருவதாக கூறுவதாக புகார்கள் வந்துள்ளன. இதுபோன்ற அங்கீகரிக்கப்படாத நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment