Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, December 28, 2020

பணிக்கொடை பிடித்தம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

'ஊழியர் செலுத்த வேண்டிய நிலுவை தொகையை, அவருக்கான, 'கிராஜுவிட்டி' எனப்படும் பணிக்கொடையில் இருந்து பிடித்தம் செய்யலாம்' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது.

அரசுத் துறை நிறுவனமான, 'செயில்'4 எனப்படும், 'ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா'வில் பணிபுரிந்த ஊழியர், ஓய்வு பெற்ற பின்னும், தனக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யாமல் இருந்தார்.

தடைஜார்க்கண்ட் மாநிலம், பொகாரோவில் உள்ள அந்த குடியிருப்புக்காக, அவர் செலுத்த வேண்டிய வாடகை பாக்கி, 1.95 லட்சம் ரூபாய், அவருக்கான பணிக்கொடையில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம், 2017ல் உச்ச நீதிமன்ற அமர்வு அளித்த உத்தரவை மேற்கோள்காட்டி, பணிக்கொடையை பிடித்தம் செய்வதற்கு தடை விதித்தது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, நீதிபதிகள் எஸ்.கே.கவுல், தினேஷ் மகேஷ்வரி, ரிஷிகேஷ் ராய் அடங்கிய, உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரித்து வந்தது. சமீபத்தில் அந்த அமர்வு அளித்துள்ள தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த, 2017ல், ஒரு வழக்கில், அந்த வழக்கின் தன்மையை கருத்தில் வைத்து, பணிக்கொடையை பிடித்தம் செய்யக் கூடாது என, உச்ச நீதிமன்ற அமர்வு கூறியுள்ளது. அது அந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவே தவிர, தீர்ப்பு அல்ல.ஒருவர் பணி ஓய்வுக்கு பின்னும், அரசு ஒதுக்கிய வீட்டில் இருந்து காலி செய்ய மறுத்தால், அவருக்கு அபராத வாடகை விதிக்கலாம். அந்த அபராத வாடகை உட்பட, அவரிடம் வசூலிக்க வேண்டிய தொகையை, பணிக்கொடையில் இருந்து பிடித்தம் செய்யலாம்; பணிக்கொடையை நிறுத்தி வைக்கலாம். இதற்காக அந்த ஊழியரிடம் இருந்து முன் அனுமதியோ, ஒப்புதலோ பெறத் தேவையில்லை.வசூலிக்கலாம்கடந்த, 2005ல், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், இது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்தைவிட, அதிகமாக அரசு குடியிருப்பில் தங்கு வோரிடம் இருந்து அபராத வாடகை வசூலிக்கலாம் என, அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.இவ்வாறு, அமர்வு தன் தீர்ப்பில் கூறியுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News