Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, December 30, 2020

பகுதி நேர துப்புரவு பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்குதல் சார்ந்த அரசாணை வெளியீடு.

மேலே படிக்கப்பட்ட கடிதத்தில் பிற்படுத்தப்பட்டோர் , மிகப்பிற்படுத்தப்பட்டோர் , சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் 1354 விடுதிகள் ( 1099 பள்ளி விடுதிகள் - 255 கல்லூரி விடுதிகள் ) தற்போது செயல்பட்டு வருகின்றன என்றும் விடுதிகளை சுத்தமாகவும் , சுகாதாரமாகவும் வைத்திருக்கும் பொருட்டும் , மாணவ , மாணவிகளின் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டும் 100 மாணவ , மாணவியர்களுக்கு மேல் தங்கிப் பயிலும் 66 விடுதிகளுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தில் முழுநேர துப்புரவாளர்களை நியமனம் செய்தும் , 100 மாணவியர்களுக்கு குறைவாக உள்ள விடுதிகளில் ரூ .2000 / - தொகுப்பூதிய அடிப்படையில் பகுதிநேர துப்புரவு பணியாளர்களை நியமனம் செய்தும் ஆணையிடப்பட்டது என்றும் பகுதிநேர துப்புரவு பணியாளர்களின் மாதாந்திர தொகுப்பூதியத்தை ரூ .2000 / -த்திலிருந்து ரூ .3000 / உயர்த்தப்பட்டது என்றும் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநர் தெரிவித்துள்ளார் . 

மாணவ 2 3. மேலும் , பகுதிநேர துப்புரவு பணியாளர் பணியிடங்கள் வேலை வாய்ப்பகம் மூலமே நிரப்பப்படுகின்றன என்றும் மாதம் ரூ . 3000 / - என மிகக் குறைந்த தொகுப்பூதியம் பெற்று வருவதால் , பகுதிநேர துப்புரவு பணியாளர்கள் மிகுந்த சிரமமான சூழ்நிலையில் உள்ளதாகவும் , மேற்காணும் பணியாளர்கள் பகுதிநேரமாக நியமிக்கப்பட்டாலும் பணி நிறைவு செய்து வீடு திரும்புவதற்கு ஒருநாள் ஆகிவிடுவதால் இவர்கள் வேறு பணிக்கு செல்ல இயலாத நிலை ஏற்படுகிறது என்றும் இப்பணி பகுதிநேரப்பணி என்பதால் , அவர்கள் இப்பணியை துறந்துவிட்டு கூடுதலாக வருமானம் உள்ள தொழிலுக்கு சென்றுவிடும் நிலை உள்ளது என்றும் தெரிவித்து , இத்துறை விடுதிகளில் பணிபுரியும் 517 பகுதிநேர துப்புரவு பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டியும் மேற்கண்ட அறிவிப்பை செயல்படுத்தும் விதமாகவும் அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளார் . 

அரசு 4. பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநரின் பரிந்துரையை நன்கு கவனமுடன் ஆராய்ந்து , மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அமைச்சரின் அறிவிப்பினை செயற்படுத்த ஏதுவாக அதனை ஏற்று பிற்படுத்தப்பட்டோர் , மிகப்பிற்படுத்தப்பட்டோர் , சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ மாணவியர்களின் சுகாதாரத்தை கருத்திற் கொண்டும் , விடுதிகளை தூய்மையாக பராமரிப்பதன் அவசியத்தினை கருதியும் துப்புரவாளர் பணியிடம் இன்றியமையாதது என கருதப்படுவதால் , 01.03.2020 அன்றுள்ளபடி , பிற்படுத்தப்பட்டோர் , மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் இணைப்பில் கண்டுள்ள 517 பகுதிநேர துப்புரவு பணியாளர்களை , இவ்வரசாணை வெளியிடப்படும் நாளிலிருந்து , ரூ.4,100- ரூ .12,500 என்ற சிறப்பு காலமுறை ஊதிய விகிதத்தில் ( Special Time Scale of pay ) முழுநேர துப்புரவு பணியாளர்களாக பணியமர்த்தி அரசு ஆணையிடுகிறது .

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News