கொரோனா ஊடரங்கு காரணமாக தமிழகத்தில் மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பல பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்துகிறது. அதேநேரத்தில் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்படுகின்றன.
இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருவள்ளுவர் புகைப்படம் காவி நிற உரையில் இருந்துள்ளது. இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏற்கெனவே, திருவள்ளுவருக்கு பா.ஜ.கவினர் காவி உடை அணிந்ததற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்தநிலையில், தமிழக அரசின் தொலைக்காட்சியிலேயே காவி உடை திருவள்ளுவர் புகைப்படம் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், காவி நிறத்தில் திருவள்ளுவர் உருவம் கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டதற்கு முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பும், கண்டனும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியில் திருவள்ளுவர் உருவம் தவறுதலாக காவி நிறத்தில் ஒளிபரப்பப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment