Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, December 31, 2020

FASTAG முறைக்கு கால அவகாசம் நீட்டிப்பு- மத்திய அரசு அறிவிப்பு..!

நாளை முதல் அனைத்து வாகனங்களிலும் பாஸ்டேக் கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்க்கான அவகாசம் பிப்.15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சுங்கச்சாவடிகளை கடக்கும் பொழுது வாகனங்கள் கட்டணம் செலுத்துவதற்காக நீண்ட நேரம் நிற்க கூடிய நிலை ஏற்படுகிறது. இந்தநிலையை மாற்றவும், விரைவில் பணம் வசூல் செய்யப்பட்டு செல்வதற்கு பாஸ்டேக் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜனவரி 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் பாஸ்டேக் அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை உத்தரவிட்டது.

இதற்கான அவகாசம் நாளையுடன் முடியுள்ள நிலையில், பாஸ்டேக் அட்டை பொருத்துவதற்கு அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. அதன்படி வருகின்ற, பிப்ரவரி 15-ஆம் தேதி வரை பாஸ்டேக் அட்டை பொருத்துவதற்கான கால அவகாசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுங்க சாவடியை கடக்கும் 85 சதவீதத்திற்கும் அதிகமாக வாகனங்களில் பாஸ்டேக் அட்டை உள்ளதாகவும் நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது.
Dailyhunt

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News