Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, December 31, 2020

Tnpsc தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு... உங்களுக்கு கொண்டு வரப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் இது தான்..!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
போட்டி தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

போட்டி தேர்வு எழுத வருபவர்கள் இதற்கு முன் தேர்வு தொடங்கும் வரை அனுமதிக்கப்பட்டனர். இந்த முறை மாற்றப்பட்டு இனி வரும் நாட்களில் காலை 9.15 மணிக்கு பிறகு வரும் தேர்வர்கள் தேர்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

விடைத்தாளில் பதிலளிக்கவும், குறிக்கவும் கருப்பு நிற மையிலான பால் பாயிண்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஏனைய நிற மைகளை கொண்ட பேனாவுக்கு அனுமதியில்லை.

விடைத்தாளில் கையெழுத்து போடுவதுடன் இடது கை பெருவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும்.

வினாத்தாளில் விடை தெரியாத கேள்விகளுக்கு விடைத்தாளில் அதற்கென கொடுக்கப்பட்டுள்ள ஆப்ஷனில் குறிக்க வேண்டும். (ஆப்ஷன் இ).

இதேபோல் விடைத்தாளில் ஏ.பி.சி.டி.இ. என்று ஒவ்வொரு விடைக்கும் எத்தனை வட்டங்கள் கருமையாக்கப்பட்டன என்பதை கணக்கிட்டு அதன் எண்ணிக்கையை உரிய கட்டங்களில் நிரப்ப வேண்டும்.

இதில் ஏதேனும் தவறோ, குளறுபடிகளோ தேர்வர்கள் செய்திருந்தால் 5 மதிப்பெண்கள் குறைக்கப்படும்.

தேர்வர்களின் நலனை கருத்தில் கொண்டும் தேர்வு முறையில் தவறுகள் நடந்துவிடக் கூடாது என்பதற்காகவும் இந்தக் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News