Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, January 4, 2021

புதிதாக பணியேற்கவுள்ள கணினி ஆசிரியர்களுக்கு 12 நாட்கள் பைதான் புரோகிராமிங் (Python Program) பயிற்சி அளித்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

பொருள் : பள்ளிக் கல்வி அரசு மற்றும் நகராட்சி பள்ளிகளில் புதிதாக பணியேற்க உள்ள கணினி ஆசிரியர்களுக்கு பைதான் புரோகிராமிங் ( Python Program ) பயிற்சி அளித்தல் - சார்பு . பார்வை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் . 8101 / M2 / இ 1 / 2019 , நாள் , 30.12.2020 . மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பைதான் புரோகிராமிங் ( Python Program ) பயிற்றுவிக்கும் ஒரு முயற்சியாக , அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் புதிதாக பணியேற்க உள்ள கணினி ஆசிரியர்களுக்கு இரண்டு வார காலத்திற்கு Faculty Development Workshop on ' Problem Solving Using Python ' திட்டமிடப்பட்டுள்ளது . மேலும் , பைதான் புரோகிராமிங் ( Python Program ) மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டங்களின் கீழ் வழங்கப்படுகிறது . 

மாணவர்கள் உயர்படிப்பில் திறமையாக தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் வகையில் திறன் மேம்படுத்திட மேல்நிலைப் பள்ளி பாடத்திட்டத்தில் ஆசிரியர்கள் சுமார் 300 மணி நேரம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கிட ஊக்குவிக்கும் வகையில் Bootcamp நடத்தப்பட உள்ளது . 

பைதான் புரோகிராமிங் ( Python Program ) ஒரு பொது நோக்கத்திற்கான மொழியாக இருப்பதால் , இந்த Bootcamp மூலம் ஆசிரியர்கள் , திறமையான மாணவர்களை உருவாக்க முடியும் . 

மேலும் , Web Developing . Data Analysis , Artificial Intelligence மற்றும் Machine Learing and Scientific Computing போன்ற வளர்ந்து வரும் துறைகளுடன் மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை வடிவமைக்க ஏதுவாக Bootcamp பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது . 

ஆசிரியர்களுக்கான Bootcamp 12 நாட்களுக்கு காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை Amphisoft நிறுவன வல்லுநர்களின் நேரடி விரிவுரைகள் மூலம் நடைபெறும் . அதனைத் தொடர்ந்து இணையதளம் மூலம் பயிற்சி வகுப்புகள் ( Online Practice Session ) நடைபெறும் .

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News