2019 - 20-ம் ஆண்டுக்கு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி வட்டியை 8.5% ஆக வரவு வைக்க நிதி அமைச்சகம் ஒப்புதல் தந்திருப்பதால், தொழிலாளர் அமைச்சகம் விரைவில் இதனை அரசாணையில் வெளியிட்டு அமல்படுத்தும்.ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் 6 கோடிக்கும் மேற்பட்டோர் சந்தாதாரர்களாக உள்ளனர்.
மாதம் தோறும் ஊழியரும், நிறுவனமும் இணைந்து அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 25% தொகையை இ.பி.எப்.ஒ.,விற்கு அளிக்கின்றன. நிறுவனத்தின் 12% பங்களிப்பில், 8.33% தொகை ஓய்வூதிய கணக்கில் வரவு வைக்கப்படும். இதற்கு ஒவ்வொரு நிதி ஆண்டும் வட்டி நிர்ணயிக்கப்படும். அந்த வகையில் இந்தாண்டு 8.5% ஆக வட்டி நிர்ணயிக்கப்பட்டது.இதில் 8.15% வட்டி ஒரு தவனையாகவும், 0.35% வட்டியை மற்றொரு தவனையாகவும் செலுத்த இருந்தனர்.
பின்னர் முழுமையாகவே செலுத்திட தொழிலாளர்கள் அமைச்சகம் முடிவு செய்தது. இதற்கு நிதி அமைச்சகம் முறையான ஒப்புதல் வழங்கியது. விரைவில் தொழிலாளர் அமைச்சகம் இதனை அரசாணையில் வெளியிட உள்ளது. அதைத் தொடர்ந்து பி.எப்., மீதான வட்டி விகிதத்தை சந்தாதாரர்களின் கணக்குகளில் வரவு வைப்பதற்கான வழிமுறைகள் தொடங்கும். 2018 - 19-ல் பி.எப்., வட்டி விகிதம் 8.65% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பி.எப்., இருப்புத் தொகை அறிய!இ.பி.எப்.ஓ., தளத்தில் பதிவு செய்துள்ள உங்களின் மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணிற்கு மிஸ்ட் கால் கொடுத்தால், பண இருப்பு விவரங்கள், யு.ஏ.என்., எண்ணுடன் குறுஞ்செய்தியாக வந்துவிடும். யுமேங்க் (UMANG) செயலி மற்றும் இ.பி.எப்.ஓ., இணையதளம் மூலம் விரிவான பாஸ்புக்கை பார்க்கலாம்.
No comments:
Post a Comment