நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் அனைத்து மக்கள் வீடுகளுக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர் கொண்டுச்செல்ல மத்திய அரசு திட்டமிட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதேநேரத்தில் மக்கள் சிலிண்டரை எளிதாக ஆர்டர் செய்யும் வகையில் நடைமுறைகள் அவ்வப்போது மாற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய நடவடிக்கை ஒன்றை அறிமுகமாகியுள்ளது.
அதாவது சமையல் எரிவாயு சிலிண்டர் பெற பிரத்யேக எண்ணிற்கு கால் செய்து ஆர்டர் செய்யவேண்டுமா என கேள்வி எழுப்பும். அதற்கு உரிய பதிலாக நாம் எண்களை அழுத்தி தெரிவிப்போம். அதன்பின்னர் புதிய ஆர்டர் செய்யப்படும். இதில் தற்போது ஒரு புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்து.
இதன்படி இண்டேன் சமையல் கியாஸ் வாடிக்கையாளர்கள் 8124024365 என்ற எண்ணை அழுத்தி பதிவு செய்யவேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த முறையில் வாடிக்கையாளர்கள் 24 மணி நேரமும் கேஸ் புக்கிங் செய்யலாம்.
இந்நிலையில் இண்டேன் கேஸ் சிலிண்டர் புக்கிங் மற்றும் புதிய இணைப்புகளை பெற மிஸ்டுகால் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 8454955555 என்ற எண்ணுக்கு மிஸ்கால் கொடுத்தால் கேஸ் புக்கிங் ஆகிவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மேலும் எளிதான நடைமுறை என அந்நிறுவனம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே முன்னதாக ஆன்லைன் மூலம் ஆன்லைன் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்பவர்கள் ரூ.500 கேஷ்பேக் பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment