Join THAMIZHKADAL WhatsApp Groups
கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு 9மாதங்கள் முடிவடைந்த நிலையில் 10,11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு
நெருங்கிவரும் நிலையில் அந்த மாணவர்களுக்கான பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் இன்று பள்ளிகளில் நடைபெற்றது. இந்த கருத்து கேட்பு கூட்டத்தின் பெற்றோர்களின் கருத்து தொகுப்பினை சமர்ப்பிக்க முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்
பள்ளிகள் திறப்பது எப்போது ?
கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. பள்ளிகள் திறப்பது குறித்து மத்திய அரசு மாநில அரசின் முடிவில் வழங்கிய நிலையில் சில மாநில அரசுகள் பள்ளிகளை திறந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து நவம்பர் மாதம் 9-ஆம் தேதி பெற்றோர்களிடம் முதல் கட்ட கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அதில் அதிகப்படியான பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது 10,11, மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நெருங்கி வரும் நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து இரண்டாம் கட்ட கருத்து கேட்பு கூட்டம் இன்று முதல் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. சென்னையில் எம்ஜிஆர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கருத்து கேட்பு நிகழ்ச்சியில் பல மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்தினை தெரிவித்தனர்.
இதன்படி அனைத்து கல்வி நிறுவனங்களும் நாளைக்குள் கருத்து கேட்கும் கூட்டம் நடத்தப்பட வேண்டும். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களிடம் விரைவில் கருத்து கேட்டு அதன் தொகுப்பினை நாளை மாலை 5 மணிக்குள் அனைத்து மாநில தலைமை ஆசிரியர்களும் அனுப்ப வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment