Join THAMIZHKADAL WhatsApp Groups
'வாட்ஸ் ஆப்' செயலியில், 24 மணி நேரத்தில், 'மெசேஜ்'கள் மறைந்துவிடக்கூடிய புதிய அம்சத்தை அறிமுகம் செய்ய, அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.உலகம் முழுதும், 200 கோடிக்கும் அதிகமான மக்களால், சமூக ஊடக செயலி யான, 'வாட்ஸ் ஆப்' பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் நிறுவனம், சமீபத்தில், தனிநபர் பாதுகாப்பு கொள்கையில், சில மாற்றங்களை செய்து அறிவித்தது. இதற்கு, பல தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, 'டெலகிராம், சிக்னல்' போன்ற செயலிகளுக்கு மாறத் துவங்கினர்.இதற்கிடையே, தன் பயனாளிகளை கவரும் வகையில், பல்வேறு புதிய அம்சங்களை, வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வகையில், 24 மணி நேரத்தில், மெசேஜ்கள் மறைந்துவிடக்கூடிய புதிய அம்சத்தை, விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த புதிய அம்சம், சோதனை செய்யப்பட்டு வருகிறது.ஏற்கனவே, வாட்ஸ் ஆப் செயலியில், ஏழு நாட்களில், மெசேஜ்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவை மறைந்துபோகும் அம்சம், கடந்து நவம்பரில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment