Join THAMIZHKADAL WhatsApp Groups
பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்கள் இன்றும் நாளையும் தேர்வுத்துறை சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும், பெரும்பாலான மாநிலங்கள் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக 9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன.
மேலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்களுக்கான விண்ணப்பிக்கும் வாய்ப்பை தவறவிட்ட தனித்தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் இன்றும் நாளையும் தேர்வுமுறை சேவை மையங்களில் நேரில் சென்று பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் தேர்வு கட்டணத்துடன் கூடுதலாக 1000 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளது.
No comments:
Post a Comment