Join THAMIZHKADAL Telegram Group
Join THAMIZHKADAL WhatsApp Groups
1789ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரான்சில் பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். அந்த கிளர்ச்சி தான் உலக மகளிர் தினம் அமைய ஒரு வித்தாக அமைந்தது. இதனையடுத்து, உலகெங்கும் பெண்கள் உரிமைக்காக போராட்டங்களும் கிளர்ச்சிகளும் நடந்தது. பின்னர் பல்வேறு நாடுகளை சேர்ந்த பெண்கள் ஒன்றிணைந்து முதல் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடினர்.பின்வந்த நாட்களில் ஐ.நா. பெண்கள் அமைப்பு சார்பில் அனைத்துலக பெண்கள் நாள் கடைப்பிடிப்பது என முடிவெடுக்கப்பட்டதன் அடிப்படையிலேயே ஆண்டுதோறும் மார்ச் 8 ம் தேதி கொண்டாடப்படுகிறது.ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும்.
"மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா"
மலரின் மறுபிறப்பை அவதரித்து
மணப்பெண்ணை அடிவைக்கும் போது
மாமன், மாமி, நடத்தி மனமறிந்து கட்டிய
மணவாளன் தேவையறிந்து, பெற்ற
மழலையின் நலனை முன்னிறுத்தி
மயக்கும் புன்சிரிப்பில்
மதிமயங்கி தனக்கென ஏதும் எண்ணாது
மக்கட் நலன் ஒன்றே பெரும் பணியாய்
மாதந்தோறும் இடைவிடாது
மணக்கும் மலர் அன்றோ பெண்..! இதில்
மார்ச் எட்டு மட்டும் என்ன சிறப்பு!
மண்ணுலகில் பெண்ணை படைத்திட்ட பிறகு
மாளவனும், பிரம்மனும் கூட தன்
மஞ்சத்தில் நிம்மதியாய் உறங்குகிறானே! அம்மேதகு
மகளிருக்கு வருடத்தில் ஒரு நாள் என்ன
மண்ணுலகம் இயங்கும் வரை
மறவாது கொண்டாடுவோம் மகளிர் தினம்..!
IMPORTANT LINKS
Monday, March 8, 2021
Home
பொதுச் செய்திகள்
பெண்மையை போற்றுவோம்.! "மங்கையராய்ப் பிறப்பதற்கே"..சிங்கப்பெண்களுக்கு வாழ்த்துக்கள்..!!
பெண்மையை போற்றுவோம்.! "மங்கையராய்ப் பிறப்பதற்கே"..சிங்கப்பெண்களுக்கு வாழ்த்துக்கள்..!!
Tags
பொதுச் செய்திகள்
பொதுச் செய்திகள்
Tags
பொதுச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment