Join THAMIZHKADAL WhatsApp Groups
நமக்கெல்லாம் கடுகை பற்றித்தெரியும். கடுகு விதைகளில் இருந்து பெறப்படுவது கடுகு எண்ணெய். சந்தையில் பல விதமான எண்ணெய்கள் விற்கப்படும் போது கடுகு எண்ணெய்க்கு மட்டும் தனி இடம் உண்டு. அடர் மஞ்சள் நிறம் கொண்ட கடுகு விதைகள் நல்ல கொழுப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளன. ஆகையால் இவை இரத்த நாளங்களில் படிவதில்லை. ரீஃபைன்டு எண்ணெய் என்பது பதப்படுத்தப்பட்டு தயாரித்த எண்ணெய் என்பதால் சுவாச மண்டலம் மற்றும் செரிமான மண்டலத்திற்கு தீங்கு ஏற்படுத்துகிறது. இனி நாம் கடுகு எண்ணெய் குறித்த நன்மைகளை பார்ப்போம்.
இதய நன்மைகள்:
நிறைவுறா கொழுப்பு கொண்ட கடுகு எண்ணெய் இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. நிறைவுறா கொழுப்பு குறைவாக எடுத்துக் கொள்வதைக் காட்டிலும் அதிக அளவு எடுத்துக் கொள்வதால் இரத்த அழுத்த அளவைக் குறைக்க உதவுகிறது மற்றும் உடல் கொழுப்பு குறைகிறது என்று பல்வேறு ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இதிலுள்ள பல பொருட்கள் இதயத்திற்கு நன்மையை தருகின்றன. ஒவ்வொரு இந்திய வீடுகளில் கடுகு எண்ணெய் பொதுவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முற்றிலும் நன்மை செய்கிறது. இது உடலில் கொலஸ்ட்ரால் அளவை நிர்வகிக்க உதவுவதோடு ரத்தத்தில் கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. இவை இரண்டும் இதய ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானதாகும்.
இதயத்திற்கு மட்டும்தானா?
கடுகு எண்ணெய் இதயத்திற்கு பல நன்மைகளை செய்தாலும் உடல் ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளை செய்கிறது. இதில் பல்வேறு ஊட்டச்சத்துகள் உள்ளன. மேலும் இது பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மற்றும் கிருமி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. கடுகு எண்ணெயில் க்ளுகோசினோலேட் உள்ளது. இதன் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் தொற்று பாதிப்பை எதிர்த்து போராட உதவுகிறது. கடுகு எண்ணெயில் வைட்டமின் ஏ மற்றும் ஈ சத்து அதிகம் உள்ளது. மேலும் இதில் ஓலிக் அமிலம், லினோலிக் அமிலம், இருசிக் அமிலம் போன்ற கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. மேலும் குடல், சிறுநீர் பாதை, செரிமான மண்டலம் போன்ற இடங்களில் உண்டாகும் தொற்று பாதிப்பை எதிர்த்து போராடுகிறது.
அழற்சி எதிர்ப்பு பண்புகள்:
கடுகு எண்ணெய்யில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறிக்கான நிலையை குறைக்க உதவுகிறது. வயிற்றில் உண்டாகும் அழற்சியை குறைத்து குடல் பாதிப்புகளை தடுக்கிறது. கடுகு எண்ணெய்யில் அல்லில் ஐசோதியோசைனைட் உள்ளது. இந்த கூறு அழற்சியைக் குறைக்க உதவுகிறது. கடுகு எண்ணெய்யில் இருக்கும் இந்த கூறு பல்வேறு இதய மற்றும் உடல் அறிகுறிகளுக்கு காரணமாக இருப்பதால் அழற்சியைக் குறைக்க உதவுவதாக ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது.
இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது:
கடுகு எண்ணெயில் உள்ள ஊக்கிகள் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. ஆக்சிஜனேற்றம் செய்யப்பட்ட இரத்தத்தை உடலின் பல்வேறு உறுப்புகளுக்கு மிக விரைவாக தருகிறது. கல்லீரல் மற்றும் மண்ணீரலில் இருந்து இரைப்பை அமிலங்கள் மற்றும் பித்தம் சுரப்பதை ஊக்குவிப்பதால் செரிமான அமைப்பு சிறப்பாக செயல்படுகிறது.
கேன்சரை தடுக்கிறது:
கடுகு விதைகளில் குளூக்கோஸினோலேட்ஸ் மற்றும் மைரோசினேஸ் ஆகிய கலவைகள் நிறைந்துள்ளது. இது உடலில் கேன்சர் உருவாகக் காரணமான செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. ஹுயுமன் அண்டு எக்ஸ்பிரிமெண்டல் டாக்ஸிகாலஜி என்கிற பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி இந்த சின்னஞ்சிறிய விதைகளில் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் இருக்கிறது மேலும் புற்றுநோய்க் காரணிகளின் பாதிப்புகளுக்கு எதிராக பாதுகாக்கிறது என்று தெரிவிக்கிறது.
செரிமான நலத்திற்கு சிறந்தது:
கடுகு விதைகள் உங்கள் செரிமான மண்டலத்திற்கு அற்புதமான நன்மைகளைச் செய்கிறது. செரிமானப் பிரச்சனையால் நீங்கள் பாதிக்கபட்டிருந்தால் அதிலிருந்து விடுபட கடுகு உங்களுக்கு உதவும். இந்த சிறிய விதைகளில் ஏராளமான நார்ச்சத்து அடங்கியுள்ளது, இது கழிவுகளை எளிதாக வெளியேற்ற உதவுகிறது மேலும் உடலின் செரிமான சக்தியை மேம்படுத்துகிறது.
No comments:
Post a Comment