Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, March 9, 2021

ஆன்லைன் திருட்டை தடுக்க ரிசர்வ் வங்கியின் அசத்தல் ஐடியா!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களின் திருட்டைத் தடுக்கும் விதமாக ஆர்.பி.ஐ புதிய வழிமுறைகளை அறிமுகம் செய்ய உள்ளது.

அமேசான், ஃப்ளிப்கார்ட், ஸ்விகி போன்ற வலைதளங்களுக்குச் செல்லும்போது கார்டு விவரங்களை சேமித்து வைத்துவிட்டு அடுத்த முறை ஷாப்பிங் செய்யும்போது OTP எண்களை மட்டுமே பதிவு செய்து ஷாப்பிங் செய்து வழக்கம்.

இதனால் வங்கி விவரங்களும், பணமும் திருடப்படுவதாக வங்கியிலிருந்து ஆர்.பி.ஐக்கு புகார்கள் வந்துள்ளன. இதனால் இனி ஒவ்வொரு முறை ஷாப்பிங் செய்யும்போதும், ஏ.டி.எம். கார்டில் இருக்கும் 16 இலக்க எண்கள், பெயர் மற்றும் கார்டு காலாவதியாகும் தேதி என அனைத்து விவரங்களையும் புதிதாக பதிவு செய்ய வேண்டும் .

டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகளில் 16 இலக்க எண்கள் இருக்கும். அதை நினைவில் வைத்துக் கொள்வது அவ்வளவு எளிதல்ல. அதுவும் ஒன்றுக்கு மேற்பட்ட கார்டுகள் என்றால் கேட்கவே வேண்டாம். அதனால் ஆன்லைன் பணப்பரிவர்த்தனையின் போது நிறுவனங்கள், கார்டு விவரங்களை சேமித்து வைத்துக் கொள்ள விரும்புகிறீர்களா என்று கேட்டும், நாமும் ஆம் என்று கொடுத்து விடுவோம்.

அப்படி என்றால் அடுத்த முறை பணப்பரிவர்த்தனை செய்யும் போது 16 இலக்க எண்ணை டைப் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. கார்டு வேலிடிட்டி, சிவிவி நம்பர் கொடுத்தால் போதுமானது. ஓடிடி வரும் பரிவர்த்தனையை முடித்துவிடலாம்.

ஆனால் இந்த முறையை தடுக்கும் விதமாக ஆர்பிஐ புது விதி ஒன்றை கொண்டு வந்துள்ளது. அதன்படி, நீங்கள் ஒவ்வொரு முறை டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்யும் போதும், 16 இலக்க எண்ணை டைப் செய்ய வேண்டும்.

நேரடியாக கார்டு வேலிடிட்டி, சிவிவி எண் மூலம் பணம் செலுத்த முடியாது. அதாவது உங்கள் கார்டு விவரங்கள் நிறுவனங்களால் சேமிக்க முடியாது. இந்த விதி அமேசான், ஃபிளிப்கார்ட், கூகுள்பே, பேடிஎம், நெட்பிளிக்ஸ் உள்ளிட்டவற்றிற்கு பொருந்தும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஆன்லைன்ட கார்டு மோசடியை தடுக்க முடியும் என்கிறது ஆர்பிஐ. இந்த நடைமுறை ஜூலை மாதம் அமலுக்கு வருகிறது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News