Join THAMIZHKADAL WhatsApp Groups
இந்திய அரசின் மனிதவள துறையின் கீழ் செயல்படும் தேசிய தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் UGC-NET EXAM 2021 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று மார்ச் 9 ம் தேதி கடைசி நாளாகும்.
தேசிய தேர்வாணையத்தால் நடத்தப்படும் UGC-NET EXAM 2021 தேர்வுக்கான அறிவிப்புகள் முன்னதாக வெளியிடப்பட்டுள்ளது. கல்லூரிகளில் உதவி பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சியாளர் பணிக்காக இந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகள் எழுத விருப்பமுள்ளவர்கள் கல்வித்தகுதியாக கலை, அறிவியல், மேலாண்மையியல், பொருளாதாரம், மானுடவியல் போன்ற துறைகளில் 55% மதிப்பெண்ணுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இருப்பவர்கள் 31 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். நெட் தேர்வுகள் இரண்டு தாள்களாக நடத்தப்பட உள்ளது. முதல் தாள் ஒரு மணி நேரத்திற்கு நடத்தப்படும், அதில், 50 கேள்விகள் 100 மதிப்பெண்களுக்காக நடத்தப்படும். இரண்டாவது தாள் 200 மதிபெண்களுக்கு 100 கேள்விகளும் இருக்கும்.
இரண்டாவது தாள் இரண்டு மணி நேரம் நடத்தப்படும்.பல்கலைக்கழக மானிய குழு முதலில் மார்ச் 2 ம் தேதி அன்று நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இறுதி நாளாக அறிவித்திருந்தது. பின்னர், மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மார்ச் 9 ம் தேதி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இறுதி நாளாக நீட்டிப்பு செய்தது. நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியும், திறமையும் உள்ளவர்கள் அதிகார்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
No comments:
Post a Comment