Join THAMIZHKADAL WhatsApp Groups
சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை, வரையறுக்கும் முறை குறித்த அறிவிப்பு, நேற்று வெளியிடப்பட்டது.இந்த தேர்வு முடிவுகள், ஜூன் 20ல் வெளியாக உள்ளன.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியத்தால் நடத்தப்படும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அந்த மாணவர்களுக்கு எதன் அடிப்படையில் முடிவுகள் வெளியிடப்படும் என்ற கேள்வி வலம் வந்த நிலையில், அதற்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.
இந்த மாணவர்களுக்கு, 'யூனிட்' தேர்வின் அடிப்படையில், 10 மதிப்பெண்கள், 'மிட் டர்ம்' தேர்வு அடிப்படையில், 30 மதிப்பெண்கள், 'பிரீபோர்ட்' தேர்வு அடிப்படையில், 40 மதிப்பெண்கள் என, 80 மதிப்பெண்கள் வழங்கப்படும்.மேலும், 'இன்டர்னல் அசஸ்மன்ட்' எனப்படும், உள்மதிப்பீடு அடிப்படையில், மீதமுள்ள, 20 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன், 20ம் தேதி, தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment