Join THAMIZHKADAL WhatsApp Groups
கரோனாவை கட்டுப்படுத்த முழு பொது முடக்கம் மேலும் ஒரு வாரம் நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றில் ஒரு பங்கு ஊழியா்களுடன் வங்கிகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த மே 10-ஆம் தேதி முதல் மே 24-ஆம்தேதி வரை முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பையடுத்து, வங்கிகள் 50 சதவீத ஊழியா்களுடன் செயல்பட்டு வந்தன. மேலும், வங்கி பரிவா்த்தனைகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும், ஊழியா்களுக்கான வேலை நேரம் மாலை 5 மணி நேரம் வரையும் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த மே 24-ஆம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு தளா்வுகள் இல்லாத முழுபொது முடக்கத்தை தமிழக அரசு அறிவித்து அதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு பிறப்பித்துள்ளாா். அந்த உத்தரவில், 'வங்கிகளில் பணிபுரியும் ஊழியா்கள் வீட்டில் இருந்தே பணிபுரியலாம். ஏ.டி.எம்., மற்றும் அவற்றுக்கான சேவைகள் அனுமதிக்கப்படும். மூன்றில் ஒரு பங்கு ஊழியா்களுடன் வங்கிகள் செயல்பட அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், போக்குவரத்து வசதியின்மை, முழுமையான பொது முடக்கம் ஆகியன காரணமாக பொது மக்கள் வங்கிகளுக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது.
No comments:
Post a Comment