Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, July 6, 2021

குரூப் 2 மற்றும் 3 நேர்முதேர்வுகள் அறிவிப்பு.!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைம் நடத்தும் தேர்வுகள் மூலமாக தமிழக அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இலட்சக்கணக்கான அரசு ஊழியர்களை பல்வேறு தர நிலைகளில் பிரித்து தேர்வுகள் வைத்து அரசுப்பணியிடங்களை நிரப்பி வருகிறது.

இந்நிலையில், நேற்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " கடந்த 2020 ஆம் வருடத்திற்கான துறைத்தேர்வுகள் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்த தேர்வுகளுக்கான இரண்டாம் நிலை எழுத்து தேர்வுகளின் முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி அரசு தேர்வாணையத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. 2 ஆம் நிலை மற்றும் 3 ஆம் நிலைக்கான வாய்மொழி நேர்முகத்தேர்வு கொரோனா வைரஸின் பரவல் காரணமாக தாமதமாகியது. தற்போது, இந்த தேர்வுகள் நடைபெறவிருக்கிறது.

திருவள்ளூர் மையங்களுக்கு (திருவள்ளூர், காஞ்சிபுரம்) வரும் 17 ஆம் தேதியும், சென்னை மையத்திற்கு வரும் 26 ஆம் தேதி மற்றும் 27 ஆம் தேதி நேர்முக தேர்வு சென்னையில் நடைபெறுகிறது. நேர்முகத்தேர்வுக்கு அனுமதி வழங்கப்பட்ட தேர்வர்களின் அனுமதி விபரம் குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் வாயிலாக அனுப்பப்பட்டுள்ளது " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News