Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, July 3, 2021

ஜூலை 3 - வது வாரத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும் - ஆசிரியர்கள் சங்கங்கள் கோரிக்கை.

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
கொரோனா குறைவதால் தமிழகத்தில் ஜூலை 3 - வது வாரத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளது . கல்வி , தேவை , மாணவர் நலன்கருதி நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக 2020ஆம் அண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாத சூழல் நிலவி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாட்டில் 11, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், 2ஆம் அலை காரணமாக சில நாட்களிலேயே பள்ளிகள் மூடப்பட்டது. அத்துடன், தேர்வுகள் நடைபெறாமல் மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் தலைவர் இளமாறன் வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கற்றல்-கற்பித்தல் பணி முடக்கத்தில் உள்ளது. கல்வித் தொலைக்காட்சி – இணையவழி கல்வியென்பது பயிற்சியின் ஒரு வகைதான், அது முழுமையாகப் பயன்தராது எனக் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா பெருந்தொற்று தமிழ்நாட்டில் 36 ஆயிரத்தைக் கடந்திருந்த நிலையில் முதலமைச்சரின் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் மூலம் 90 % சதவீதம் குறைந்துள்ளது. மக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருக்கிறார்கள். அனைத்து செயல்களும் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது என சுட்டிக்காட்டிய இளமாறன், ஆகையால் மாணவர்களின் நலன்கருதி முடங்கிப்போயிருக்கும் கற்றல் பணியினை தொடங்கப் பள்ளிகளை திறக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

தற்போதைய சூழலில் கல்வியின் தேவையறிந்து மாணவர்களின் நலன் கருதி ஜூலை மூன்றாவது வாரத்தில் பள்ளிகளை தொடங்க வேண்டும் என்றும், பள்ளிகள் திறந்தவுடன் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஆலோசனைகளை பெற்றோர்களுக்கு வழங்கிடவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

Post Comments

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News

Back To Top