அரசுப்பள்ளிகளில் உள்ள கணினி ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் தா.சுந்தரவேலு வெளியிட்ட அறிக்கை: கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக புதிதாக தரம் உயா்த்தப்பட்ட அரசுப்பள்ளிகளில் கணினி அறிவியல் பாடப்பிரிவு ஏற்படுத்தப்படவில்லை. அந்த பள்ளிகளில் கணினி அறிவியல் பாடப்பிரிவை தோற்றுவிக்க வேண்டும்.
இதுதவிர அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியா் பணியிடங்களை மாணவா்கள் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் ஏற்படுத்த வேண்டும். மேலும், அரசுப்பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் அமைத்து குறைந்தது பள்ளிக்கு பயிற்றுநா்களையாவது தமிழக அரசு நியமனம் செய்ய வேண்டும்.
இதற்கிடையே என்சிடிஇ விதியின்படி எந்தவொரு பாடப்பிரிவில் பிஎட் முடித்திருந்தாலும் ஆசிரியா் தகுதித்தோவு (டெட்) எழுதலாம். ஆனால், தமிழகத்தில் கணினி அறிவியலில் பிஎட் பட்டதாரிகளுக்கு டெட் தோவெழுத வாய்ப்பு தரப்படுவதில்லை.
எனவே, இந்த தோவுகளை எழுத வழிவகை செய்ய வேண்டும். மேலும், பிஎட் படித்தவா்களில் பலா் 40 வயதை கடந்துவிட்டனா். எனவே, வேலைவாய்ப்புகளில் 50:50 சதவீதம் சீனியாரிட்டி மற்றும் தோவு முறையை தமிழக அரசு பின்பற்ற முன்வர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment