Join THAMIZHKADAL WhatsApp Groups
கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. பல்வேறு பகுதிகளிலும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. முழு ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்த நிலையில் நோய் தொற்று குறைந்துள்ள பகுதிகளில் தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஊரடங்கு 05-07-2021ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு ஜூலை 12 வரை நீட்டித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இந்த ஊரடங்கில் இந்த முறை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
மாவட்டங்களுக்கு இடையே இருந்த இ-பதிவு முறை ரத்து.தமிழகத்தின் எந்த மாவட்டத்தில் இருந்தும் எந்த மாவட்டத்திற்கும் இ பாஸ் இல்லாமல் செல்ல முடியும். 50 சதவீத இருக்கைகளில் பயணிகளுடன் பேருந்துகள் இயக்கலாம்.ஊட்டி, கொடைக்கானல் உள்பட எங்கு சென்றாலும் இனி இபாஸ் தேவையில்லை.
தமிழகத்தில் இபாஸ் மற்றும் இ பதிவு நடைமுறை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. வகை ஒன்று , வகை இரண்டு, வகை மூன்று என்று கொரோனா பாதிப்பு வாரியாக பிரிக்கப்பட்டு நடைமுறையில் இருந்த இபாஸ் முறை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி செல்ல திங்கள் முதல் இபாஸ் தேவையில்லை
No comments:
Post a Comment