Sunday, September 12, 2021

பள்ளிகள் திறப்பிற்கு பின் கொரோனவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் போன்றோரின் விவரங்களை அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.

பள்ளிகள் திறப்பிற்கு பின் கொரோனவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் போன்றோரின் விவரங்களை அனுப்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பாதிப்புகள் விவரம் :

தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த செம்டம்பர் 1 ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டி வருகின்றனர். கோவை மாவட்டம் அன்னுர் அருகே உள்ள ஓட்டர் பாளையம் ஊராட்சியில் உள்ள தனியார் பள்ளியில் தலைமையாசிரியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் அப்பள்ளியில் பணி புரியும் மற்ற ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பள்ளியின் வகுப்பறைகள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு பள்ளிக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒவ்வொரு மாவட்டமாக மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் போன்றோர்களுக்கு தொடர்ந்து கொரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் செப்டம்பர் 1 ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பின் அது குறித்த விவரங்களை அரசிற்கு அனுப்புமாறு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

மேலும் இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் விவரங்களைப் பூர்த்தி செய்து இணை இயக்குநரின் (தொழிற்கல்வி) மின்னஞ்சல் முகவரி மற்றும் Google Sheet- ற்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பள்ளிகளும் தங்கள் பள்ளியின் கொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை பிற்பகல் 1 மணிக்குள் அனுப்புதல் வேண்டும் என அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது . மேலும் 01.09.2021 முதல் 06.09.2021 முடிய உள்ள காலத்திற்கான விவரங்கள் இன்றே அனுப்பப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News