Saturday, September 4, 2021

பள்ளிகள் திறப்பை தொடர்ந்து அதிகரிக்கிறதா கொரோனா?

தமிழகம் முழுவதும் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 1ஆம் தேதி 9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், 7 மாணவிகளுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வரும் நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிக்கு மாணவர்கள் வருகை என்பது கட்டாயமல்ல, வர இயலாத மாணவர்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை கவனிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது.

மேலும் ஆசிரியர்கள், பணியாளர்கள் , கல்லூரி மாணவர்கள் என அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் எனவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாணவிகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
அரியலூர் அரசு உதவிபெறும் மகளிர் பள்ளியில் மேலும் ஒரு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில் சக மாணவி ஒருவருக்கு பாதிப்பு உறுதியானது.

தஞ்சை அரசு குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி மாணவி ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் வரதராஜன் பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் 12 ஆம் வகுப்பு மாணவிக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் படிக்கும் ஒரு மாணவிக்கும் தொற்று உறுதியான நிலையில், கடலூர் மாவட்டத்தில் 3 ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. பள்ளி, கல்லூரி திறப்புக்கு பிறகான சூழ்நிலை இவ்வாறு இருக்கும் நிலையில் கல்வி நிலையங்கள் மீண்டும் மூடப்படுமா அல்லது கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News