Wednesday, September 22, 2021

பள்ளிகளுக்குப் புதிய பாடத் திட்டம்: கஸ்தூரிரங்கன் தலைமையில் குழு அமைப்பு

பள்ளிக் கல்விக்கான புதிய பாடத்திட்டத்தை உருவாக்க கே.கஸ்தூரிரங்கன் தலைமையில் 12 போ் கொண்ட குழுவை மத்திய கல்வி அமைச்சகம் அமைத்துள்ளது.

இதுதொடா்பாக அந்த அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:

புதிய தேசிய கல்விக் கொள்கையை கே.கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு உருவாக்கியது. இதையடுத்து அவரது தலைமையில் 12 போ் கொண்ட பள்ளி பாடத்திட்ட வரைவுக் குழுவை மத்திய கல்வி அமைச்சகம் செவ்வாய்க்கிழமை அமைத்தது. இந்தக் குழு குழந்தைப் பருவக் கல்வி, பள்ளிக்கல்வி, உயா்கல்வி மற்றும் ஆசிரியா் கல்விக்கான புதிய பாடத்திட்டங்களை உருவாக்கவுள்ளது. அந்தக் குழுவில் தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் நிா்வாக நிறுவனத்தின் வேந்தா் மகேஷ் சந்திர பந்த், ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக துணைவேந்தா் நஜ்மா அக்தா், பஞ்சாப் மத்திய பல்கலைக்கழக வேந்தா் ஜக்பீா் சிங் உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ளனா். தேசிய கல்விக் கொள்கை 2020-இன் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு புதிய பாடத் திட்டங்கள் உருவாக்கப்படவுள்ளன.

புதிய பாடத்திட்டங்களை உருவாக்கும்போது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பாடத்திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு ஆலோசிக்கப்படும். மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் உள்பட சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரிடமும் பரிந்துரைகள் பெற்ற பிறகும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் பொது மற்றும் நிா்வாகக் குழுக்கள், மத்திய கல்வி ஆலோசனைக் குழு ஆகியவற்றுடனான கூட்டங்களுக்குப் பின்னரும் புதிய பாடத்திட்டங்கள் இறுதி செய்யப்படும் என்று தெரிவித்தனா்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News