Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, September 19, 2021

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கான யோகா பயிற்சி

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

செய்முறை:

  • விரிப்பின் மீது இரு கால்களையும் நீட்டி அமரவும்.
  • வலது காலை மடித்து வலது கணுக்கால் இடது கால் முட்டியை தொடும்படி பாதத்தை வைக்கவும்.
  • உங்கள் வலது கையை முதுகுக்கு பின்னால் கொண்டு வந்து கை விரல்களை வெளி நோக்கி இருக்கும்படி விரிப்பின் மீது வைக்கவும்.
  • இப்போது இடது கையை வலது முட்டியின் வழியாக கொண்டு வந்து வலது கால் கட்டைவிரல் பற்றி பிடிக்கவும்.
  • இப்போது உங்கள் தலை, தோல்பட்டை ஆகியவற்றை வலது பக்கம் திருப்பி வலது தோள்பட்டை வழியாக பார்க்கவும்.
  • சாதாரண மூச்சில் முப்பது எண்ணிக்கை முதலில் இருக்கவும்.
  • தலையை திருப்பி கட்டை விரலை விட்டு கையை பிரித்து காலை நீட்டி அமரவும்.
  • பின்னால் வைத்த கையையும் எடுத்து இடுப்பு பக்கத்தில் வைத்து ஓய்வு எடுக்கவும்.
  • இதற்கு மாற்று ஆசனமாக இடது காலை மடித்து செய்யவும்.
  • வலது கால் மடித்து ஒரு தடவை, இடது கால் மடித்து ஒரு தடவை செய்யவும்.

பலன்கள்:

  • கணையம் சிறப்பாக இயங்கும்.
  • தொப்பை குறையும்.
  • கிட்னி பலம்பெறும்.
  • கண் பார்வை தெளிவடையும்.
  • இதயம் பாதுகாக்கும்.
  • மன அழுத்தும் நீங்கும்.
  • தூக்கமின்மை சீராகும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News