Saturday, September 18, 2021

பொறியியல் துறை பட்டயம், பட்டதாரிகளுக்கு வேலை

வெஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பொறியியல் துறையில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சிக்கான (அப்ரண்டிஸ்) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி: Graduate Apprentice
காலியிடங்கள்: 101
உதவித்தொகை: மாதம் ரூ.9,000

பயிற்சி: Technician Apprentice
காலியிடங்கள்: 215
உதவித்தொகை: மாதம் ரூ.8,000

பயிற்சிக் காலம்: 12 மாதங்கள்

தகுதி: பொறியியல் துறையில் மைனிங்க் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது மைனிங்கி, மைனிங் மற்றும் மைனிங் சர்வேயிங் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் அழைக்கபபட்டு சான்றிதழ்கள் சரிபார்த்தல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யவும். பின்னர் www.westerncoal.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.09.2021

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News