கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளியில் 2 ஆசிரியைகளுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
கொரோனா ஊரடங்கை கட்டுப்படுத்த தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிக்கு வருகை தரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இருப்பினும் நாமக்கல் மாவட்டத்தில் 3 அரசுப் பள்ளி மாணவிகளுக்கும், அரியலூரைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவிகள் 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நெய்வேலியில் 2 ஆசிரியைகளுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் பள்ளிகளை மூடும் நிலை ஏற்படுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment