Tuesday, September 7, 2021

பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்த வலியுறுத்தி- மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பத்திரிக்கை செய்தி

CPS ஒழிப்பு இயக்கம் மதுரை மாவட்டத்தின் சார்பாக 06.09.2021 திங்கள் மாலை 5.45 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பாக மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் தெரிவித்த கருத்தினை கண்டித்தும், உடனடியாக தேர்தல்

வாக்குறுதியில் தெரிவித்ததை போல் பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்த வலியுறுத்தியும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆசிரியர் சரவணன் மற்றும் பிரேமா ஆனந்தி இருவரும் கூட்டாக தலைமை ஏற்றனர். மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜா ராஜேஸ்வரன் கோரிக்கை விளக்க உரையாற்றினார்.

தோழமை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சோ.நடராஜன், சோலையன், மாரியப்பன், மனோகரன் ஆசிரியர் காளிராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் 20 பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் திரளாக பங்கேற்றனர்.

CPS ஒழிப்பு இயக்கம் மதுரை மாவட்டம்







No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News