Tuesday, September 7, 2021

அரசு ஊழியர்களுக்கான பயனுள்ள அறிவிப்புகள்

தமிழக சட்டப்பேரவையில் அரசு ஊழியர்களுக்கான பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.

பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்புகள்:
தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வானது 2022 ஜனவரி முதல் அமல்படுத்தப்படும். இதன்மூலம் 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பயன்பெறுவார்கள்.


சத்துணவு ஊழியர்களுக்கான ஓய்வு வயது 58லிருந்து 60ஆக உயர்த்தப்படும்.
அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும்.


அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும்.


அரசு ஊழியர்கள் பயன்பெறும் விதமாக தனி தொலைபேசி உதவி மையம் அமைக்கப்படும்.


புதிதாக பணியில் சேரும் அரசு ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க அந்தந்த மாவட்டங்களிலேயே பயிற்சிகள் வழங்கப்படும்.


கடந்த 2017 முதல் அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தம், தற்காலிக பணிநீக்கம் ஆகிய நாள்களை வேலை நாள்களாக மாற்றம்.


போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ரத்து. பணியிடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் முந்தைய இடங்களுக்கே மாற்றம்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News