தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நேரடியாக பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் அனைத்து பள்ளிக்கல்வித்துறையை சார்ந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், திட்டமிட்டப்படி வரும் 1ஆம் தேதி முதல் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.
10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு காலாண்டு அரையாண்டு தேர்வுகள் நடத்துவதற்கு வாய்ப்பில்லை என்றும் நேரடியாக மார்ச் ஏப்ரல் மாதத்தில் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று கூறினார்.
No comments:
Post a Comment