Wednesday, October 13, 2021

16.10.2021 சனிக்கிழமை விடுமுறை அளிக்கக்கோரி பள்ளிக்கல்வி ஆணையரிடம் கோரிக்கை!

சனிக்கிழமை விடுமுறை அளிக்கக்கோரி மதிப்புமிகு. ஆணையர் அவர்களை சந்தித்து நிறுவனர். Dr.அ.மாயவன் அவர்கள் கோரிக்கை
14.10.2021 வியாழன் , 15.10.2021 வெள்ளி ஆகிய நாட்களுக்கும் ஆயுத பூஜை , சரஸ்வதி பூஜை , விஜயதசமி என அரசு விடுமுறை அளித்துள்ளது. இந்த தொடர் விடுமுறைகளுக்கிடையில் 16.10.2021 சனிக்கிழமை ஒரு நாள் மட்டும் வேலை நாளாக உள்ளது. தொடர் விடுமுறை என்பதால் மாணவர்களுடைய வருகையும் கணிசமான அளவிற்கு குறைந்துவிடும் , மற்றும் ஏராளமான ஆசிரியர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வருவார்கள்.

ஆகவே , இடையில் வருகின்ற அந்த ஒரு நாளுக்கும் , அதாவது 16.10.2021 சனிக்கிழமைக்கும் சேர்த்து விடுமுறை வழங்கினால் ஆசிரியர் பெருமக்களுக்கும் , மாணவச் செல்வங்களுக்கும் மிகவும் நன்மை பயக்கும் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

ஆகவே அருள்கூர்ந்து எங்களின் இந்த நியானமான கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து 16.10.2021 சனிக்கிழமைக்கும் சேர்த்து விடுமுறை அளிக்க ஆவன செய்யுமாறு கனிவுடன் வேண்டுகிமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News