Wednesday, October 13, 2021

16.10.2021 - சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

பல்வேறு ஆசிரியர் சங்கங்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் வாரத்தில் 6 நாட்களும் செயல்பட்டு வருவதாகவும் மாணவர்கள் விடுப்பின்றி பள்ளிக்கு வருகை புரிகின்றனர் என்றும் , கணிசமான ஆசிரியர்கள் தங்களது சொந்த மாவட்டங்களிலிருந்து தொலைதூரத்தில் பணிபுரிந்து வருகின்றனர் என்றும் , 14.10.2021 மற்றும் 15.10.2021 ஆகிய இருநாட்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதால் வார இறுதிநாளான சனிக்கிழமை 16.10.2021 அன்று விடுமுறை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.


இக்கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி 16.10.2021 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.


No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News