Wednesday, October 20, 2021

6 புதிய வகை விளையாட்டுகள் பள்ளிகளில் அறிமுகம் - ஆசிரியர்களுக்கு புத்தாக்கப்பயிற்சி - Proceedings

இந்தியப் பள்ளிகளுக்கான விளையாட்டுக் குழுமத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட 6 புதிய வகை விளையாட்டுகளுக்கு இணைப்பு அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி புத்தாக்கப் பயிற்சிகள் அளித்திடவும் இதில் மாவட்டம் ஒன்றிற்கு ஒரு விளையாட்டிற்கு 2 உடற்கல்வி ஆசிரியர்கள் விதம் 45 வயதிற்குட்பட்ட உடற்கல்வி ஆசிரியர்களுக்கு இப்பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே திருப்பத்தூர் மாவட்டத்தின் சார்பில் இணைப்பில் கண்டுள்ள உடற்கல்வி இயக்குநர் / உடற்கல்வி ஆசிரியர்கள் மேற்காண் புத்தாக்கப் பயிற்சியில் கலந்து கொள்ள ஏதுவாக 20.10.2021 பிற்பகல் முதல் பணியிலிருந்து விடுவிக்கவும் இதற்கான பயணப்படிகளை பள்ளி நிதியிலிருந்து அவர்களுக்கு அளித்திடவும் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

இப்பயிற்சியில் கலந்துக்கொள்ள உள்ள உடற்கல்வி இயக்குநர் மற்றும் ஆசிரியர்கள் விளையாட்டு சீருடை காலணிகள் , மற்றும் தங்குவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளுடன் தவறாமல் கலந்துக்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* 6 புதிய வகை விளையாட்டுகள் :

* பயிற்சியில் கலந்து கொள்ளும் உடற்கல்வி ஆசிரியர்களின் விவரம் :



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News