பள்ளி மாணவர்களுக்கு சனிக் கிழமை விடுமுறை அளிக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டுகோள் - நிறுவனத் தலைவர் - சா.அருணன்
கொரோனா இண்டாம் அலை பெருமளவில் பரவி பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் , கொரோனா இரண்டாம் அலை பரவல் குறைந்து வந்ததை தொடர்ந்து செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 9,10.11, மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கி வருங்கின்றது மேலும் வருகின்ற நவம்பர் ஒன்று முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிக்களை திறக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவு அளித்துள்ளார் இதனை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வரவேற்று நன்றியை தெரிவித்துக் கொள்கிறது ,
மேலும் பெரும்பாலான அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் திங்கள் முதல் வெள்ளி கிழமை வரை 90% விழிக்காடுகளுக்கும் மேல் வருகை புரிகின்றனர் ஆனால் சனிக்கிழமை மட்டும் 25% விழுக்காடு கீழாகத்தான் பள்ளிக்கு வருகின்றார்கள் , மாணவர்களின் பெற்றோரை தொடர்புக் கொண்டு கேட்கும்போது தன்பிள்ளைகள் பள்ளிக்கு வருவதாக சொல்லி தான் வருகிறார்கள் என்கிறார்கள் , அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் அன்றாட கூலி வேலைக்கு செல்வதால் பெற்றோர்கள் சரியாக கவனிக்க இயலவில்லை , மேலும் பெரும்பாலான அரசு பள்ளிகளில் சுயற்சி முறையில் மாணவர்கள் வருவதால் , பள்ளிக்கு வருகை புரியாத நாளில் அவர்களின் நிலை கேள்வி குறியே ஆதலால் அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நிலை அறிந்து கொரோனா தாக்கம் குறைந்து வருகின்ற சூழலை அடுத்து ஒரு அறையில் 20 மாணவர்கள் என்றிருப்பதை 30 முதல் 35 மாணவர்கள் அமரவைக்க வேண்டும் , படிப்படியாக சுழற்சி முறை குறைக்க வேண்டும் , மாணவர்கள் நலன் கருதி சனிக்கிழமை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையும் , மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களையும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்
சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு
No comments:
Post a Comment