Tuesday, October 12, 2021

பள்ளி கல்வித்துறையில் பூஜ்ஜியக் கலந்தாய்வு என்றால் என்ன?

இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு மட்டும் புதியதாக பூஜ்ஜியக் கலந்தாய்வு என்ற நிகழ்வு அரங்கேர உள்ளது. அப்படியானால் பூஜ்ஜியக் கலந்தாய்வு எப்படி நடக்கும் என்பது பற்றி ஒரு பார்வை.

முதலில் அனைத்து பணியிடங்களும் காலிப் பணியிடங்களாக அறிவிக்கப்படும். பின்னர் EMIS மூலமாக பணியிட வாரியாக பணிமூப்பு பட்டியல் தயாரிக்கப்படும். இணைய வழி மூலம் கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வு நாளன்று கலந்தாய்விற்கு முன்னர் பணிமூப்பு பட்டியல் வெளியிடப்படும். பணிமூப்பு பட்டியலின் படி கலந்தாய்விற்கு நபர்கள் அழைக்கப்படுவார்கள். அப்பொழுது அவர்களுக்கு காலிப்பணியிடங்கள் திரையில் தோன்றும். அதில் தற்பொழுது அவர்கள் பணிபுரியும் இடம் அவர்கள் தேர்ந்தெடுக்க இயலாத வகையில் (disable) மறைக்கப்பட்டிருக்கும். அவர்கள் விரும்பும் இடத்தை தேர்ந்தெடுக்கலாம். 

கலந்தாய்விற்கு முன்னர் கலந்தாய்வு விதிகள் வெளியிடப்படும். அதில் ஊனமுற்றோர், முன்னாள் இராணுவத்தினர், இராணுவத்தில் பணிபுரிபுவர்களின் மனைவி, புற்றுநோய்,இதயநோய் போன்ற மிகவும் கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வழிகாட்டுதல்கள் வெளியிடப்படலாம். ஒவ்வொரு பணியிடங்களும் மாறுதல் கலந்தாய்வு நிரைவடைந்தவுடன் மீதமுள்ள காலிப்பணியிடங்களுக்கு கீழ் நிலைப் பதவியிலிருந்து பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும்.

உதாரணமாக மாவட்டக் கல்வி அலுவலர் கலந்தாய்வு முடிந்தவுடன் அந்த பணியிடத்திற்கான பதவி உயர்வானது மேனிலை / உயர்நிலைப் பள்ளித் தலைமைஆசிரியர் வழங்கப்படும். இது முடிந்தவுடன் தலைமைஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். அனைத்து தலைமை ஆசிரியர் பணியிடங்களும் காலிப் பணியிடமாக அறிவிக்கப்பட்டு விதிகளின் படி பணிமூப்பு பட்டியல் தயாரிக்கப்பட்டு அதன் படி கலந்தாய்விற்கு அழைக்கபடுவர். பின்னர் முதுகலை ஆசிரியர் பதவியிலிருந்து தலைமைஆசிரியர் பணியிடத்திற்கு பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும். இதே போல் அனைத்து பணியிடங்களுக்கும் பூஜ்ஜிய கலந்தாய்வு நடைபெறும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News