Saturday, October 2, 2021

தீபாவளி கழித்து பள்ளிகள் திறக்க அரசு பரிசீலிக்குமா..? அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

நவம்பர் 1ம் தேதி ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பதில் தற்போதுரை வரை மாற்றமில்லை.

நவம்பர் 1ம் தேதி தீபாவளி என்றாலும் 1ம் தேதி பள்ளிகள் திறப்பதில் மற்றமில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

நவம்பர் 1ம் தேதி ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பதில் தற்போதுரை வரை மாற்றமில்லை. ஏற்கனவே மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை, மருத்துவத்துறை வல்லுநர்களின் ஒப்புதலோடுதான் பள்ளி திறப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது என்றார். திட்டமிட்டபடி பள்ளிகளைத் திறப்பதில் உறுதியாக உள்ளோம். என்றும் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகை வருவதால், பள்ளி திறப்பை மறு பரிசீலனை செய்ய வாய்ப்புள்ளதா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் தெரிவித்தார்.

முன்னதாக, தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்களின் ஆலோசனையின்படி, 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ மாணவிருக்காக பள்ளிகளும் மற்றும் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன.

அதே போல், 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர், பள்ளி செல்லாமல் பல மாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது அவர்களிடையே பெரும் மன அழுத்தத்தையும் சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும் இழப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவ வல்லுநர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் தெரிவித்ததைக் கருத்தில் கொண்டு, அனைத்து பள்ளிகளிலும், 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கான வகுப்புகள், கொரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 01-11-2021 முதல் நடத்த அனுமதிக்கப்படும் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News