Friday, October 22, 2021

கற்றல் குறைபாடு உடைய குழந்தைகளின் எண்ணிக்கை விவரங்கள் கோரி தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு!

தமிழக அனைத்து மாவட்டங்களிலும் கல்வித் துறையின் கீழ் , மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கட்டுப்பாட்டில் சயல்பட்டுவரும் அனைத்து அரசு பள்ளிகள் / அரசு பெறும் பள்ளிகள் / தனியார் பள்ளிகளில் பயிலும் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகள் எண்ணிக்கை விவரம் அவசியமாக தேவைப்படும் நிலையில் , தங்கள் மாவட்டத்தில் , தங்கள் கட்டுப்பாட்டில் செயல்பட்டுவரும் அனைத்து அரசு பள்ளிகள் / அரசு உதவி பெறும் பள்ளிகள் / தனியார் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளில் கீழ்கண்ட குறைபாடுகள் உள்ள குழந்தைகள் எண்ணிக்கை விவரங்களை 15 நாட்களுக்குள் ஆணையத்திற்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

1. கற்றல் குறைபாடுள்ளவர்கள் ,
2. மெல்லக் கற்போர்
3. அறிவுத்திறன் குறைவாக உள்ளோர் .
4. மன இறுக்கம் மற்றும் அறிவுசார் குறைபாடுகள் உடையோர்.



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News