Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, October 11, 2021

BT Vacancy List - நிரப்ப தகுந்த பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிட விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
11.10.2021 நிலவரப்படி நிரப்ப தகுந்த பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிட விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!



பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி / மாதிரி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 11.10.2021 அன்றைய நிலவரப்படி நிரப்பத்தகுந்த பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 12.10.2021 அன்று நடைபெறும் முதன்மைக் கல்வி அலுவலர்களின் கூட்டத்தில் ஒப்படைக்குமாறும் அதன் நகலினை சி 3 பிரிவு மின்னஞ்சல் முகவரிக்கும் ( c3sec.tndse@nic.in ) அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் , காலிப்பணியிட விவரங்களை அனுப்பும்போது 01.08.2019 பணியாளர் நிர்ணயத்தின்படி ஆசிரியரின்றி உபரி ( Surplus Post Without Person ) எனக் கண்டறிந்து இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு ஒப்படைக்கப்பட்ட பணியிடங்களை எக்காரணத்தைக் கொண்டும் காலிப்பணியிடங்களாகக் கொண்டு வருதல் கூடாது என்றும் கூடுதல் தேவையுள்ள ( Addl . Need Post ) பள்ளிகளின் பெயர்களையும் காலிப்பணியிடங்களாகக் கருதக் கூடாது என்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் , தற்போது அனுப்பப்படும் காலிப்பணியிட விவரங்கள் நாளது . தேதியில் அப்பள்ளிக்கு பூர்த்தி செய்ய ஏதுவாக நிரப்பத்தகுந்த காலிப்பணியிடம் ( Eligible vacancy ) தானா என்பதை உறுதி செய்த பின்னரே உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பப்படவேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை இயக்ககத்திற்கு அனுப்பிய பிறகு கலந்தாய்வு நடைபெறும் அன்றைய நாளில் எக்காரணத்தை கொண்டும் சேர்க்கை / நீக்கம் / திருத்தம் போன்றவைகளை மேற்கொள்ளக்கூடாத வகையில் சரியாகவும் துல்லியமாகவும் தரவேண்டும். அதே சமயத்தில் நிரப்பத்தகுந்த காலிப்பணியிடங்களை ஒன்றுக்கூட விடுபடாமல் தரவேண்டும் . இதில் தவறுகள் ஏதேனும் பின்னர் கண்டறியப்படின் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் / நேர்முக உதவியாளர்கள் / கண்காணிப்பாளர்கள் / பிரிவு எழுத்தர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது.

மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள காலிப்பணியிட படிவத்தில் கூடுதலாக ஒன்றியத்தின் பெயர் ( Block Name ) சேர்க்கப்பட்டுள்ளது எனவே அதனையும் உரிய கலத்தில் குறித்து படிவத்தில் உள்ள காலங்களை எக்காரணம் கொண்டும் மாற்றம் செய்யாமல் Example ல் தெரிவித்துள்ளவாறு பூர்த்தி செய்து ஒப்படைத்தல் வேண்டும் எனவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

Post Comments

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News

Back To Top